தமிழைப் பேசு
அது நாவுக்கு இன்பம்!
தமிழை எழுது
அது விரல்களுக்கு இன்பம்!
தமிழைக் கேளு
அது செவிகளுக்கு
இன்பம்!
தமிழில் சிந்தனைசெய்
அது மனதுக்கு இன்பம்!
தமிழில் பாடு
அது ஆத்மாவுக்கு இன்பம்!
தமிழில் கவியெழுது!
அது பிறவியெடுத்ததன் இன்பம்!
த.ஹேமாவதி
கோளூர்