இதழ்களின் முத்தமே பேசும் மொழியாகும்!
இருவிழிகளின் முத்தமே செல்லும்
வழியாகும்!
உளியின் முத்தமே
கண்கவர் சிலையாகும்!
காற்றின் முத்தமே
துள்ளும் அலையாகும்!
எழுதுகோலின் முத்தமே பிறக்கும் எழுத்தாகும்!
விரல்முனையின் முத்தமே
அலைபேசியின் இயக்கமாகும்!
கதிரவனின் முத்தமே நாளின் துவக்கமாகும்!
த.ஹேமாவதி
கோளூர்