Header Ads Widget

Responsive Advertisement

திறவுகோல்



மனம் ஒரு குரங்கு அல்ல!

மனம் ஒரு திறவுகோல் ஆகும்!

எதனையும் திறந்து

உட்புறம் நுழைந்து

தெரியாததையும்

தெரிந்துக்கொள்ள

உதவும் திறவுகோலே மனம்!

தினம்தினம் மனம்

காண்பன யாவையும் திறந்திட

முயல்வது இயற்கையே!

இந்த இயற்கை தந்த பரிசுகளே புதுபுது கண்டுபிடிப்புகள்!

கருவறை தொடங்கி கல்லறை வரை

துருப்பிடிக்காத திறவுகோல் இது!

முதுமை வந்தாலும்

இது தளர்வடையாது!

பொங்கும் புதுவெள்ளமென இளைஞர்களின்

மனமென்னும் திறவுகோல்!

நல்லதும் தீயதும்

இரண்டும் கொண்டது!

நுழையக்கூடாத

இடங்களைத் திறந்து நுழைந்து

மதியது கெட்டு

உடலது தளர்ந்து

பாரதி போ போ

எனவெறுத்த இளையபாரதமாய்

இல்லாமல்

செல்லவேண்டிய இடங்களைத் திறந்து நுழைந்து

மதியது பெருகி

உடலும் மனமும்

செம்மையாகி

பல்லோரக்கு உதவி

பாரதி வா வா என வரவேற்ற இளையபாரதமாய்

இருக்க இளையோர்கள் விழையவேண்டும்!

பிறரின் அந்தரங்கத்தைத் திறக்கும் முயற்சியில் எவருடைய திறவுகோலுக்கும் அனுமதி இல்லை!

மனமென்ற திறவுகோலால்

அனைவரது நட்பில்

அன்பில் நுழைவோம்!

இரும்பாலான திறவுகோலை துருப்பிடிக்காமல் வைத்திருக்கும் எண்ணெய் போல

மனமென்ற திறவுகோலை புன்னகையால்

என்றென்றும் புத்தம்புதிதாக வைத்திருப்போம்!


த.ஹேமாவதி

கோளூர்