நாங்கள் மேலே ஏன் வந்தோமென்று ஆச்சர்யப்படுகிறீர்களா?
எங்கள் ஆணிவேரைக்கூட சல்லிவேர் ஆக்கிவிட்டீர்களே
நாங்கள் தண்ணீரைத்தேடி வந்தோம்
பூமியிலுள்ள நீரையெல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்
சாலை முழுவதும் சிமெண்டால் மூடி
மழைநீரையும் பூமியினுள்ளே செல்லாமவ் தடுத்து விட்டீர்
எங்களுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்
எங்களால் எப்படி வளர முடியும்
மழை வர மரங்கள் வளர்க்கச் சொன்னால்
நீங்கள் யாகம் வளர்க்கிறீர்கள்
உங்களுக்கு உதவும் எங்களை உதாசீனம் செய்கிறீர்கள்
நாங்கள் இல்லையென்றால்
உங்களுக்கு
உணவு தான் உண்டோ?
இருப்பிடம்தான் உண்டோ?
தயவுசெய்து நீங்களும் வாழ்ந்து
எங்களையும் வாழ விடுங்கள்
வருங்கால சந்ததிக்கு எங்களை படத்தில் காட்டாமல்
நேரில் காட்டுங்கள்
எங்களின் நிலைமை உங்களுக்கு வாராதிருக்க
எங்களுக்கு பாதுகாப்பு செய்யுங்கள்
மழையைப் பெறவே
மரமும் நாமும் வளர்த்து பூத்துக்குலுங்க செய்திடுவோம்
இயற்கை காற்றை சுவாசித்திடுவோம்
இன்னலின்றி வாழ்ந்திடுவோம்
தி.பத்மாசினி