சாணை பிடிக்க வேண்டுமா, சாணை?
குரல் கேட்டு வெளியே எட்டிப் பார்க்கிறேன்
கத்தியைத்தீட்ட காத்திருக்கின்றனர் சிலர்.
தீட்டவேண்டியது கத்தியை மட்டுமா? புத்தியையும் என்பதை மறந்து விட்ட மனிதர்கள்.
கூர்செய்ய வேண்டியது அரிவாளை மட்டுமா?
அறிவையும் என்பதையும் மறந்துவிட்ட மானிடர்.
கத்தியைத் தீட்டக் காட்டுகிறார் கவனம்,
புத்தியைத் தீட்டுவதில் மட்டும் ஏன் சலனம்.
கத்திக் கத்தித் தளர்ந்தே போனது,
அறிவைத் தீட்டும் ஆசிரியப்பேரினம்.
கண்டு கொள்ளத்தான் தயாராக இல்லை
வாக்குகளை விற்கும் ஆறறிவு மனித இனம்.
இருந்தாலும் மனதிற்குள் ஒரு சிறு நிம்மதி,
இருந்தாலும் மனதிற்குள் ஒரு சிறு நிம்மதி,
எத்தனையோ குறைகளிடை சின்ன ஒரு நிறைவு,
'புத்தி தீட்ட வேண்டுமா, புத்தி?'
என்று அலைய ஆரம்பிக்கவில்லை இன்னும்.
*சுலீ. அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.