Header Ads Widget

Responsive Advertisement

கலாமும் இராமேஸ்வரமும்

ஆர்ப்பாட்டம்

இல்லாத கடல் அது இராமேஸ்வரம்!

ஆர்ப்பாட்டம் பண்ணாத குடியரசுதலைவர் அவர் அப்துல்கலாம்!

இராமேஸ்வரத்தில்

பிறந்தவர்!

இனிமைகுணங்கள் நிறைந்தவர்!


கடலின் அமைதியே இவர்குணம்!

கடலின் ஆழமே

இவர் புலமை!

கடலின் குளுமையே இவர்மொழி!


இராமேஸ்வரத்தில்

எங்கு திரும்பினாலும்

ஓங்கிய தென்னைகள்!

உலகத்தில் எங்கு திரும்பினாலும் ஓங்கிய புகழ் இவருக்கு!

கடலின்மீது பாம்பன் பாலம்

உலக அதிசயம்

எனில்

ஏவுகணைநாயகன்

இவரது விண்வெளிஅறிவோ

அதைவிட அதிசயம்!

தனுஷ்கோடி

என்ற பாரம்பரியத்தைத் தன்னுள் புதைத்துக்

கொண்டுள்ளது இராமேஸ்வரம்!

வானியல் விஞ்ஞானி ஆனபோதும் பெற்றோர்காட்டிய பழமையை தன்வாழ்நாள் வழியெனக் கொண்டவர் இவர்!

இராமர் கட்டிய பாலம் உண்டா இல்லையா என்ற சர்ச்சை ஒருபுறம்!

கலாம் ஒரு இஸ்லாமியரா இந்துவா என்று சர்ச்சை பண்ணுமளவு

சர்வசமய மனப்பாங்காளர் இவர்!

ஒரேஒரு வித்தியாசம் இவருக்கும் இராமேஸ்வரத்திற்கும் உண்டென்றால் அது

இராமேஸ்வரத்தில்

வரும் சுனாமியால் ஆபத்து!

ஆனால் இவரது புலமைச் சுனாமியால் உலகுக்கு ஆக்கமே!


த.ஹேமாவதி

கோளூர்