"ஜெய் ஜக்கம்மா!
என் நாடு, என்நிலம், என்பயிர்,என்மக்கள்
அவர் உழைப்பு அதன் பலன்அதைக்கேட்க நீ யார்?"
தூக்கத்தில் இருந்த என்னை தட்டி எழுப்பியது ஒரு சிம்மக்குரல்.
விழித்த என் கண்முன்னே விறைப்புடனே நிற்கின்றான்
வீறுகொண்டெழும் ஏறுபோல் சீறியபடி ஒரு வீரன்.
பரங்கியனின் கண்களிலே விரல் விட்டு ஆட்டிவைத்து
வெள்ளையனை மிரளவைத்த பாஞ்சாலங்குறிச்சி வீரன்.
அவன் கால் பதிந்த மண்கூட போரிட்டு வென்றுவிடும்
என்று அந்த பரங்கியனைச் சொல்ல வைத்தவீரன்.
நம்பியவன் துரோகத்தால் காட்டியே கொடுக்கப்பட்ட,
மன்னிக்க வேண்டாமல் மரணத்தை முத்தமிட்ட, தன்மானம் என்னவென்று தலைமுறைகள் பேசவைத்த,
கயத்தாறில் உயிர்நீத்து
காலமெல்லாம் உயரந்து நின்று,
புளிமரத்தைக்கூடப் புனிதக் கொடிமரமாய் வணங்கவைத்த
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற அந்த வீரன்.
அவனைத் தூக்கிலிட்ட கயிறைக்கூட தொலைத்து விட்டபின்னும், அவன் நினைவு நாளில் அவன் நினைவில் கண்களிலே கண்ணீர்,
வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகம் தந்த கண்ணீர்.
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.