முகில்கள்
வானத்திற்கு
பிரியாவிடை
சொல்கின்ற நேரமிது!
பிள்ளைமுகிலெனப்
பிறந்து
வெண்முகிலெனப்
பெயர்பெற்று
வானத்தின் மேனியிலே தவழ்ந்து விளையாடி தன்னாவியை
நீராவியோடு
காதலிலே இணைத்து குளிர்ந்து சூலுற்று
வெண்மை யாவும்
கருமையாய் மாறிட
அதை மண்ணிலுள்ளோர்
கண்டு மகிழ்ந்திட
மயிலினங்கள் ஆடிட
ஆனந்தத்தால் துள்ளிட
அங்கே வான்மீதிலோ
சோகம் சூழ்ந்தாட
வானத்தந்தையைப்
பிரியப்போகிறோமே
என்று கார்முகிலும்
தன்மகளாம் கருமுகிலைத் தான்
பிரியும் வேளை வந்துவிட்டதென்று
அந்த வானமும்
சோகத்தில் மூழ்க
வானமண்டலமே
இருண்டது!
இருண்ட வானத்தின் ஒவ்வோரு பகுதிக்கும் சென்று
தொட்டு கட்டித்தழுவி அன்போடு கருமுகில் பிரியாவிடை சொல்லும் நேரமிது!
இன்னும் சிறிது நேரத்தில்
வானத்தந்தை
தன்மகளாம் அவளை பூமிக்கு
மழையாக
இடியென்ற வெடிவெடிக்க
மின்னல் என்ற
ஒளிச்சரங்கள் எரிய
அனுப்பும் வேளையிது!
வரவேற்க தயாராவோம்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*