கைகள் குழந்தையின் பிஞ்சு பாதங்களை பூப்போல அள்ளியெடுத்து கண்ணிரண்டில் ஒற்றிக்கொள்ள
பிள்ளைப் பாதவாசனையில்
நாசி மெய்மறந்து கர்வமுற
அருகிருந்ந செவியிரண்டும்
பதைபதைத்து தன்னால் அப்பாதங்களைத் தொடமுடியவில்லையே
எனக் கலங்கின!
அப்போது
இளம் பிஞ்சுப் பாதங்களைப் பார்த்து கண்கள் கூறியது
பிறவிப் பயன்
அடைந்துவிட்டேன்!
இனி குருடாகிப் போனாலும் கவலையில்லை எனக்கு!
இளம்பிஞ்சு பாதங்களைத் தொட்டுப் பார்த்த கைகள் இறுமாந்துச் சொன்னதென்ன வென்றால்
இதைவிட உயர்ரகப் பட்டு எங்கு சென்றாலும் கிட்டுமா என்ன?
இளம்பிஞ்சு பாதங்களைச் சுற்றி
அலங்கரிக்கும்
வெள்ளிமணிச் சலங்கையின் சிணுங்கலோசை கேட்ட காதிரண்டும்
முத்தமிழின் ஓரங்கமாம் இசைத்தமிழை மொத்தமாய்ச் சுவைத்தனவென்று
தம்பட்டம் அடித்துக் கொண்டன!
*த.ஹேமாவதி
*கோளூர்