'முத்தலாக் முறையை ஒழித்து விடவேண்டும்'
முனைப்புடனே செயல்படுகிறது சில இந்துக்களின் இயக்கம்.
'சபரிமலையில் பெண்களை அனுமதித்தே ஆகவேண்டும்' கரிசனம் காட்டுகிறது சில இஸ்லாமிய இயக்கம்.
உயிர்கள் எதையுமே கொல்லுதல் கூடாது
சொல்கிறது தமிழரைக் கொன்ற புத்தமத இயக்கம்.
பலாத்காரம் என்பது சாத்தானின் செயல் பரிவுடனே சொல்கிறது
கன்யாஸ்திரியின் கதறலைக் கூட கேட்காத சில கிருஸ்தவ இயக்கம்.
'இந்துமதத்தில் மட்டும் தான் மூடநம்பிக்கை' மதசார்பின்மை முழங்குகிறது திராவிட இயக்கம்.
மதம் மாற்றி மனிதனைக் காக்க நினைக்கிறது மகத்தாக செயல்படும் இன்னும் பல இயக்கங்கள்.
பிறர் மனை தேடுவது தவறல்ல என்று வக்காலத்து வாங்குகிறது சில சமத்துவ இயக்கம்.
இதுவன்றோ நாம் காணும் அன்பின் தத்துவம்!
பிறருக்காய் குரல் கொடுக்கும் மனிதநேய தத்துவம்!
வளர்கிறது நாட்டில் இந்த சகோதரத்துவம்!
தேவையா இத்தகைய சகோதரத்துவம்?
சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.