பூவுலகப் பெண்கள்
அதிகாலையில் புள்ளி
வைத்து கோலமிடுகிறார்கள்
ஆகாய மங்கை
இரவு முழுதும்
நட்சத்திரங்களாய்
புள்ளிகளை வைத்து
கோலமிடுவதற்குள்
பொழுதும் புலர்ந்து
பகலவனும் தோன்றுவதால்
புள்ளிகளும் மறைவதால்
ஒரு நாள் கூட அவளால் கோலத்தை முழுவதுமாய்
போட முடியவில்லை
பெண்களே ஆகாய
மங்கைக்கு முடிந்தால் உதவலாமே
தி.பத்மாசினி
