Header Ads Widget

Responsive Advertisement

சூதாட்டம் சூதாட்டம் சூதாட்டம் - வத்சலா


மதுவுக்கு அடுத்த சமூகசீர்கேடு !
மானம் இருந்தால் தப்பியோடு!
குடும்பங்கள் அழிய இது ரோடு!
கூவாத குயிலாகும் உன் பேடு(ம்)!
பொன்இழப்பாய் பொருள் அழிப்பாய்!
பொத்தி வைத்த மானம் அழித்து....
பொதுவான இடத்துக்குள் மண்
புதைந்தேநீயும் வீணில் போவாய்!
இன்றைய வாழ்விலே சூதாட்டம்!
இயல்பாய் போனது பல கட்டம்!
இந்தியப்பொருளாதார சட்டம்!
இருந்தும் ஏனைய க(ஷ்)ட்டம்!
தருமன் தோற்றான் துரியன் சபையில்
வரலாற்றவலமாய் பெண்ணிழந்தாள்...
                           மானங்காக்கும்துகில்!
பாரதம் படிப்போரின் மனதெங்கும்
                         சுட்டெரிக்கும் வெயில்!
வேண்டாம் சூதாட்டமெனும் பாடம்
                                            பயில்!
வீடு துவங்கி வீதி வரையிலும்......
சாவு தொடங்கி சுடுபூமி வரையிலும்...
விசேடத்தின் விசேடமாய் அமைந்து
ஆசாடபூதித்தனம் செய்தே அழிக்கும்!
வென்றாலும் தோற்றாலும் வன்மம்
                                       வளர்க்கும்!
விளையாட்டுப்போட்டிகளில் நடக்கும்!
விபரீத விளையாட்டே சூதாட்டம்!
கருப்புப்பணம் கை மாறும்
சில்லரை அங்காடி தான் ஆடுகளம்!
வீட்டுப்பொருளாதாரத்துடன்
நாட்டுப்பொருளாதாரமும் நலிந்து.....
நடுவீதிக்கு தள்ளிவிடும் கைகோர்த்து!
வீணாய்போக வழிகாட்டும்உனை
                                          சேர்த்து!
நாட்டோடு வீடும் நலங்காண வேணும்!
உன் எண்ணங்கொஞ்சம் மாற்று!
உழைத்த கொண்டுவரும் உன்காசில்
ஒருவேளைச் சோறாவது உண்டு பாரு!
உரிமையின் இன்பத்தை புதையலாய்
உண்மையில் தத்தெடுத்திடு!    பேரின்பம் எதிலென்ற உண்மை
                                    அறிந்திடு!
ஏமாற்றிச் சேர்க்கும் பணம் நில்லாது!
சோம்பேறிவாழ்க்கை வெற்றிதராது!
உழைத்து வாழ்ந்திடில் வரும் உயர்வு!
உன்னித்துப்பார்க்கையில் நீங்கும்
                                          அயர்வு!
சூதாட்டம் அழிக்க தேவை ஒரு
போராட்டம், கூட்டிணைந்து ஆடும்
சதிராட்டம்; வென்றால் தடுத்திடலாம்
அதனின்கொடும் பேயாட்டம்!
🌹🌹வத்சலா🌹🌹