நிழல் மனிதர்கள்
==============
எங்கிருந்து வருகிறார்கள்.....??
கிளறப்பட்ட
புற்றிலிருந்து
கிளம்பும் எறும்புகள் போல
எங்கிருந்து வருகிறார்கள்....??
கருநீலச்சீருடை
மஞ்சள் தலைக்கவசமும்
அணிந்து சிலர்.... ஏழ்மையின்
பிரதிபலிப்பாய்
சிலர்......
இவர்களுக்கிடையே......
நட்சத்திரக்குவியலுக்கிடையே
ஒளிரும்
நிலவுபோல்சிலர்
பளிச்சிடும் குங்குமம்,
வகிட்டிலும் ஆறடுக்கு தூக்கு,
வளைகையிலுமாக,
தம்நிழல் தாம்
நோக்கவும்
நேரமின்றி நடக்கும் மங்கையர்கள்!!!
இனம்மொழி...... இவர்க்கு இங்கே இடைஞ்சலில்லை.
பாரம்பரிய பழக்க
பகட்டுமில்லை....
பழங்கதைபேசவும்
பொழுதுமில்லை...
அடுத்தவர் உழைப்பை
உறிஞ்சவில்லை
இவர்கள்..
மனதின் நினைவு
களில்..
மங்காவலியுண்டு!
மாறாத வடுவுமு
ண்டு!!!
விற்றகடனடைக்க
விதியின்றி ..... சொந்தத்தைசோர்
விலும்;
பந்தத்தை பாதியி
லும்; விட்டு
நொந்தமனம்வேக
வந்த இவர் வசம்...
கண்ணீர் கதை
மறைக்க
திராணியுண்டு!!!
எத்தகுபாரமும்
சுமக்க
வலிமை உண்டு!!!
வியர்வை சிந்த
விவேகமுண்டு!!!
உழைப்புக்கேற்ற
ஊதியத்தை சேமித்துஊருக்கு அனுப்பி தம் சொந்தங்களை
மீட்க நம்பிக்கையும்
மிக்க உண்டு எனும் இவர்கள்
நேர்மறை எண்ணங்கள்
ஜெயிக்க என்
பிரார்த்தனையும்
நிச்சயம் உண்டு!!!
🌹வத்சலா🌹
