Header Ads Widget

Responsive Advertisement

முடியுமா முடியாதா...?

முடியாது என்பதைச் சொல்ல உன்னால் முடியும்

எனில்......முடியும் என்பதைச்

சொல்ல

உன்னால் ஏன்

முடியவில்லை...?

முடியாதென நினைத்திருந்தால்

புயல் தென்றலாய்

புரண்டிருக்காது

முடியாதென

நினைத்திருந்தால்

நிலம்கீறி விதை

விருட்சமாயிக்காது

முடியாதென 

நினைத்திருந்தால்

மலைதோன்றிய

நீர் அருவியாய்

வழிந்திராது

முடியாதென

நினைத்திருந்தால்

பறவைகள் வான

                 ..  . .     ம்

பழகியிருக்காது

முடியாதென

நினைத்திருந்தால்

பூமியில் இரவுபகல்

பூத்திருக்காது

முடியாதென

நினைத்திருந்தால்

அப்துல்கலாமின்

அக்னி ஏவுகணை

அகிலத்தை அரண்டுபோக

வைத்திருக்காது

முடியாதென

நினைத்துக்கொண்டிருந்தால்

இந்தியா வல்லரசாகும் 

ஐயாவின்கனவை

நிஜமாக்கவே முடியாது

என்ன செய்யப்

போகிறாய் என்

இளைய சமூகமே

🌹வத்சலா🌹