உளறி கொட்டியப்படி
நடந்து வந்தான்
உலக நலனில்
உண்மையைத்தேடி
ஒருவன்..
உலகத்தில் ஊழ்வினை
அறியாமல்
வாழந்து
கொண்டுதானே
இருக்கிறார்கள்
மனிதர்கள்..
சமயம் பார்த்து
சாதித்துவிடலாமென்று
சண்டைக்கு
தயாராகும் தகுதியில்லா மனிதக்கூட்டம்..
தரணியில்
வாழ்வதற்கு
மன உரம்
தெளிவின்
உச்சம்
நிதானத்தின்
கைப் பிடியில்
நகரும்
மனிதக்கூட்டம்
ஒரு சிலரே..
பல
கூட்டங்களில்
சில
குறிப்புண்டு
யார்
நல்லவன்
யார்
கெட்டவன் என்ற
அடையாளம் தெரியாமல்
கூட்டத்தில் ஆயுதங்களைப்
பயன்படுத்தும்
அலாதியப்
பிரியர்களுக்குத்
தெரியாது..
பாதிக்கப்படுவன்
நம்மைப்போல்
மனிதனென்று
யாரும்
உணர்வதில்லை..
சிந்திக்கும் ஆற்றல்
எவர்களிடமும்
இல்லை..
உலகம் மாறி விட்டது
மலையேறி விட்டது
எங்ககிட்ட
பாச்சா
பழிக்காதென்று
சிலர்..
மனிதன்
மாறாமல்
மனிதனைக்
குற்றம்
கூறிக்கொண்டு
அலைகிறது
ஒருகூட்டம்..
மாறவேண்டியது
உலகமல்ல
நாம்தான்..
பிறப்பின்
பெருமையைப்
பேசுவதைவிட
இறப்பின் பேராண்மையைப் பேசட்டும்...!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..