Header Ads Widget

Responsive Advertisement

செடிகள்



இருப்புப்பாதையின் இருமருங்கிலும்
செடி கொடிகளெல்லாம் கண்ணைக்கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன
இதில்

சில செடிகள் யார் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பியது என்று கேட்பது போலவும்

சில அப்பாடா வெகுநாள்கழித்து குளிப்பது என்ன சுகமென்று களிப்புடனும்

சில செடிகள் உயர்ந்து நின்று நான் தான்முதலில் மழையைப்பிடிக்கிறேனென்று களிப்புடனும்

கோவைக்கொடிகளெல்லாம் சில செடிகளை மூடி நிற்க அவைகள் அதையும் மீறி சிறு குழந்தைபோல் மழையை ஆவலுடன் எட்டிப்பார்க்க

வெள்ளை
மலர்களெல்லாம் மேலே முகத்தைக்காட்டி மாரியை முகத்தில் மாறி மாறி வாங்கி ரசிக்கின்றன

எருக்கஞ்செடிகளெல்லாம் கையை நீட்டி மழலையைப் போல் மழையை அரவணைக்கின்றன

மரத்தின் கீழிருக்கும் செடிகளெல்லாம் இந்த இன்பம் நமக்கு கிடைக்கவில்லையென்று ஏக்கத்தோடு பார்க்க

இதைக்கண்ட மின்கம்பத்திலிருந்த கொடிகள் அவைகளை வா வா என கையைசைத்து அழைக்க அவைகளால் வரமுடியாமல் தவித்தது

இதைக்கண்ட மரங்கள் வருத்தமுற்று காற்றின் உதவியுடன் சற்றே விலக அந்தச்செடிகளும் நனைந்து மகிழ்ந்தன
 
நாமும்
மழையைக்கண்டு மகிழ்ந்திடுவோம்
மழைநீரை சேமித்திடுவோம்
நீர்மேலாண்மை காத்திடுவோம்

தி.பத்மாசினி