பா என்றால் பாட்டு!
பா என்றால் பால்!
அது அமுதம்!
பா என்றால் பாசம்!
அது அன்பு!
பா என்றால் பாரதம்
அது நம்தேசம்!
பா என்றால் பாட்டனார்!
அவர் அன்பின்பெட்டகம்!
பா
என்ற உடனே
வருகின்ற வார்த்தைகளே
உங்களைப் பிடித்திருக்கிறது!
ஆனால்
பா
என்றால் பாலியல்!
பா
என்றால் பால்வன்புணர்ச்சி!
பா
என்றால் பாலியல்வன்முறை!
அப்பப்பா!
வேண்டாமே
இந்த பா க்கள்!
கொடியதான
இந்த பா இனங்கள்
சமூகத்திலே
உலவ விட்டவர்கள்
பசுதோல் போர்த்திய புலிகளாய் மறைந்திருக்க!
பாதிக்கப் பட்ட
மானினங்கள்
சொல்லியும் சொல்லாமலும் மனதுக்குள் குமைந்திருக்க!
பா வே!
இதற்குக் காரணமான
பாவிகளைப் பந்தாடு!
பாவிகளால் பந்தாடப்பட்ட அப்பாவிகளைப்
போராட தைரியம் கொடு!
நன்றி............பா
த.ஹேமாவதி
கோளூர்