மூத்தவளோ
இளையவளோ
எப்படியிருந்தாலும்
சகோதரியும்
ஒரு தாயே!
தாயிடம் பகிரமுடியாததையும்
இவளிடம் எளிதாகப் பகிரமுடிவதால்
இவள் தாயினும்
மேலானவளே!
பற்பலச் சந்தர்ப்பங்களில்
கோபக்காரத் தந்தைக்கும்
பயங்கொண்ட
சகோதரனுக்கும்
இடையே இணைப்புப்பாலமாகவும்
செயல்படுவாள்!
அதனாலே
குடும்பத்தை அழகான பூந்தோட்டமாக மாற்றிடுவாள்!
திருமணம் முடிந்து
புகுந்தகம் சென்றாலும்
தன்னுயிர் நீங்கும்வரையிலும்
தன்பிறந்தவீட்டுப் பாசத்தை மறக்கமாட்டாள் இவள்.
பண்டிகைதோறும்
தன்சகோதரன் வாங்கித்தரும் சேலைதான் இவளின் முதல்விருப்பம்!
அத்தையாக
இருக்கையிலே தன்சகோதரன் பெற்றெடுத்த குழந்தைகள்மீது இவள்பொழியும்
அன்பைக் கண்டு
அந்த வான்மழையே
நாணும்!
மொத்தத்தில்
சகோதரி இல்லாத
ஆண்கள் எல்லோரும் பாக்கியம் இல்லாதவர்களே!
த.ஹேமாவதி
கோளூர்