Header Ads Widget

Responsive Advertisement

கயத்தாற்றின் புளியமரம்


அன்றொரு நாளிலே

கயத்தாற்றில்

வீற்றிருந்த

அந்த புளியமரம்

என்னவோ விபரீதம்

இன்று நடக்கப்போகிறதென்றெண்ணி

தன்னுள் குமைந்தது!

அடுத்தநொடியே

பெருஞ்சிங்கமென

வந்து நின்ற

மாவீரனைக் கண்டு

மலைத்தது!

அவன்தான்

வீரபாண்டிய கட்டபொம்மன்!

அந்நியர்க்குக் கட்டுப்படாத உரிமையை விட்டுத்தராத பரங்கியரை கதிகலங்க வைத்த

பாஞ்சாலக்குறிச்சியின்

பாராளும் வேந்தன்!

கப்பம் கட்டவில்லை!

பரங்கியர்க்கு அடங்கவில்லை!

இருகாரணத்தால்

ஜக்கம்மாவின் பக்தன் எட்டப்பனால் காட்டித் தரப்பட்டு

இதோ இந்த புளியமரத்தடியில்

தூக்கிலிடப் பட்டான்!

கட்டபொம்மனின்

வீரமரணத்தால்

சிலிர்சிலிர்த்தது

அந்த புளியமரம்!

அன்றிலிருந்து

நம்தேசமெங்கும்

காணப்படும் புளியமரங்கள் யாவும்

வீரமரங்களாகின!


த.ஹேமாவதி

கோளூர்