வேலைக்கே செல்லாமல் பிள்ளையை நீ பார்க்கவேண்டும்
பிள்ளைகளைப் பார்ப்பது தான் வேலையென்று கொள்ள வேண்டும்
என்று சொல்லிக் கனவுகளைக் காயமாக்கி நிற்பவரை ஊமையாகப் பார்த்து நின்றால்
அந்த மௌனம் சம்மதமில்லை.
பேருந்தில் செல்கையிலே அலுவலகப் பணியிடையே
அறிவுகெட்ட ஜென்மங்கள் அடக்கமில்லா அற்பர்கள்
அங்கத்தில் கையைவைத்தால் அதை அவர்கள் பொறுத்து நின்றால்
அந்த மௌனம் சம்மதமில்லை.
இல்லையென்று வாதாடி பெண் பேசும் நியாயம் ஒன்றே மண் பேசும் நியாயம் என்று
ஆண் பேசும் நியாயத்தை அகந்தையின் வடிவமென்று
பெண்ணுரிமை பேசுவதை மௌனமாகக் கேட்டுநின்றால் அந்த மௌனம் சம்மதமில்லை.
எங்கெங்கோ ஏதோசில கழிசடைகள் கருணையின்றி
காமத்தைக் காட்டி நின்றால்
பெண்மையையே சிதைத்து நின்றால்
ஆண் இனமே அவலம் என்ற கூக்குரலில் கலங்கி நின்றால்
அந்த மௌனம் சம்மதமில்லை.
*சுலீ. அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.