Header Ads Widget

Responsive Advertisement

புனிதத்தை இழந்து விடுவாய் மனிதனாகப் பிறந்தால்...!

மனிதன் எதற்காகப் பிறந்தான் 

என்று

கேள்வி என்னுள்ளே

எழத்தொடங்கியது..


நாலு பேரு 

முன்னாடி

நல்லவன்னென்று

பேரெடுக்கவா..


எல்லோரும் என்னைவிட உயர்ந்தவனென்று

இவ்வுலகில்

யாருமில்லையென்று

ஊரார் பேசவா..


இல்லை பொய்யும் புரட்டும்

இல்லா உத்தமனென்னறு

வாய்கிழியப்

பேசவா..


பொய் 

முகங்களைப்

பொறுக்கி 

எடுத்து

அதில் 

எது 

நல்லதென்று

தன் முகத்தில்

மாட்டிதிரியும்

மனிதர்களில்..


இவர்களில்

அசலான

முகத்தில் அன்போடு

பேசினாலும்

காரியமாவதற்கு

நமட்டுசிரிப்பை

காட்டி 

நிற்கிறானென்று

நம் பின்னால் சொல்ல

நாலுபேருண்டு என சொல்லும் நாட்டாமைகளுண்டு..


யாரு

என்ன சொன்னாலென்ன

வாழ்வது 

நாம் தான்னென்று

தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளும்

மனப்பாங்குடைய

பொய்யர்கள்

மத்தியில்

மனிதனென்ற போர்வைக்குள்

விலங்குகளைப்போல

நயவஞ்சகர்கள்

நடமாடிக்

கொண்டிருக்கும் 

போது..


நாம் பிறந்தது 

எதற்காக 

என்று

வாழ்வு முடியும் வரை

சிந்திக்காமல்

மரிக்கப்போகும் மனிதனே 

இனி 

பிறப்பையே  கனவில்கூட

நினைக்காதே

புனிதத்தை 

இழந்து விடுவாய்

மனிதனாகப்

பிறந்தால்...!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..