Header Ads Widget

Responsive Advertisement

பேனா

பந்தாடப்படும் முள்; பலியாகும் வார்த்தைகளின் பிறப்பிடம்;  


கொண்டாடப்படும், வார்த்தையின் இனிமையில்; 


திண்டாடிடும், வார்த்தையின் கசப்பில்;  


தித்திக்கும் கவிதையால்; 


திகட்டிடும் கட்டூரையால்;  


வாழ்த்திடும் (உண்)மை உள்ளவரை; 


வீழ்த்திடும் (பொய்)மை வந்தவுடன்  மனித நாவைப் போல....


மூ.முத்துக்குமார்