சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமேயில்லை
வந்தாரை வாழவைக்க வஞ்சமுமில்லை
பரந்துகிடக்கும் என்னைசிலர் காண்பதே இல்லை
கனிமவளம் பல இருந்தும் நான் அலட்டிக்கவில்லை
நீங்கள் என்னை மண்ணாக நினைத்தாலும் நான் உங்களை பொன்னை அள்ளித்தந்திடுவேன்
நாடாளும் மன்னவனும் வீடில்லா சின்னவனும் எனக்கு ஒன்றுதான்
விவசாயி ஒருவர்தானே என்னை கண்டுகொள்கிறார்
மற்றவரெல்லாம் என்னை துண்டாடுகிறார்
கூட்டமாக வந்தாலும் தனியாக வந்தாலும் வாழவைக்க நான் தயங்கியதில்லை
நீங்கள் மட்டும் ஏனோ என்னை அருவருக்கின்றீர்
அசுத்தமாக்கி அல்லல்படுத்தி அலையவிடுகின்றீர்
என்னை வளைத்துப்போட ஆசைபட்டு பிறரை அழிக்கின்றீர்
அழிகின்ற உடலுக்கு அழகு சேர்க்கின்றீர்
அழியாத என் உடலை நாசமாக்கின்றீர்
செயற்கை உரங்கள் போட்டு என்னை மலடியாக்கினீர்
நான் ஏதும் தராத போது திட்டித்தீர்க்கின்றீர்
செயல்களும் நீங்களே செய்வினைகளும் நீங்களே என்னை செல்லாக்காசாக்கிவிட்டீர்கள்
எனக்கும் மூச்சுமுட்டுது தேவையில்லா பொருட்களைஉற்பத்தி செய்து அதை
என்னை கொட்டி என்னை சாகடிக்காதீர்
ஓரிடத்தில் நீங்கள் செய்யும் தவறுகளெல்லாம் உலகம்முழுதும் பாதிப்பை ஏற்படுத்துமே
நிலத்தின் மாசுபாட்டைக் குறைத்து
செயற்கை செயல்கள் அழித்து
இயற்கையோடு இயற்கையாய் நிலத்தை வாழ வைப்போமே
தி.பத்மாசினி