அடுப்படியில்
அமர்ந்து
அமைதியாய்
அரிசி சோறு பொங்கி
வடிச்ச கஞ்சிய
வயிராற குடிச்ச காலம்
அற்புதமான காலம்
வயிறு நெறஞ்சது
வலிமை வந்தது
வாலிபம் பிறந்தது..
ஔிமயமான
எதிர்காலமுனு
எதை எதையோ
கொண்டுவந்து
ஏடா கூடமாகி
எந்திரமான உலகத்துல
எந்திர அடுப்புல
எரியறது தெரியாமா
சமச்சி சாப்பிட்டாலும்
வயிறு எரிச்ச
நிக்கல
மன எரிச்சலும் நிக்கல
மாயமான
உலகத்துல
சோத்துல கூட
கலப்படம்
இந்த உலகம் எப்படி உருப்படும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..