Header Ads Widget

Responsive Advertisement

இடை ஆட்டம் பாரீர்- ஹேமாவதி


     (Belly Dance)

இணையற்ற ஆட்டமாம் *இடையாட்டம்* பாரீர்!
..........இதுதானே *எகிப்தியரின்* ஈடிலாத ஆட்டம்!

அணையாத தழலொளியாய் அந்நாளின் நடனம்
..........அழியாமல் இன்றளவும் ஆடுகிறார் பாரீர்!

இணையற்ற இவ்வாட்டம் இந்தியாவின்  சொத்தோ?
.........இக்கேள்வி என்னுள்ளே நெடுநாளாய் உண்டு!

அணைமீறும் ஆறாக அழகுடைய பெண்ணின்
...........அக்கால *விறலியாட்டம்*  இடையாட்டம் தானோ?
(1)

இடைநெளியும் அதனோடு இணைந்தேதான் *தொப்புள்*
......... *இழையெனவே மாறிமாறி பலவடிவங்* கொள்ளுமே!

அடையாளம் இவ்வாட்டம் *அரபுமண்ணில்* என்றும்
........ஆனாலும் பலநாட்டில் இடையாட்டம் உண்டு!

கடைந்தெடுத்தச் சிலையாக *இடையழகைக் கூட்டும்*
..........கண்ணுக்கு எளிதாகத் தெரிந்தாலும்
ஆட

*படைமறவர் போலன்றோ* பயிற்சிதனைச் செய்வர்!
........பக்குவமாய் தானியங்கள் காய்கறிகள் உண்பர்!
(2)

*உடைக்கவேண்டும்* ஆபாசம் என்போரின் பல்லை!
........தடையேது கண்ணுக்கு இடையாட்டம் காண

கடைதந்த கனிவகைளின் *தோலெடுத்து* நானே
.........கன்னியாடும் இடையாட்டம் *கருத்தாகச் செய்தேன்!*

விடையில்லா *கவலைகளைத் தூரவீசி வாரீர்!*
........வில்லாக இடைநெளிக்கும் *இவளாட்டம் பாரீர்!*

சடைமுடியார் ஆடுகின்ற ஆட்டத்தின் முன்னால்
........ *சிறுமழலை போலாகும்* இடையாட்டம் *வாழ்க!*

த.ஹேமாவதி
கோளூர்
👇👇👇👇👇👇👇