ஓடி
வருவாய்
என்று தெரியும்
எங்கிருந்தாலும்
என்
உடை
வாசத்திலேயே
அடையாளம்
கண்டு விடுகிறாய்
எப்போது
வருவேனென்று
காத்திருக்கிறாயோ
வந்ததும் செல்லமாய்
மேலே தாவி
நாவால் தடவி
பின்
நகத்தால்
பிராண்டுகிறாய்
அன்போடு
அணைத்தபடி
அப்படியே
உறங்கிப் போகிறேன்
சளை வாயில்
அவள் நினைவுகளை
சொட்டியபடியே
என் மார்பில்
கிடக்கிறாய்
என்
அன்பு
கனவுப் பூனையே..