Header Ads Widget

Responsive Advertisement

கனவு காணுங்கள்*



கனவுகள் அனைத்தும் நனவாகும் வரை
நனவானதெல்லாம் நிலைத்து நிற்கும் வரைக்
கனவு காணுங்கள்.

உங்கள் திறமையை நீங்கள் உணரும் வரை
நீங்கள் உணர்ந்ததை உலகறியும் வரைக் கனவு காணுங்கள்.

பசி என்ற வார்த்தையை புசி என்று மாற்றவும்
திசையெங்கும் அது நாளும் எதிரொலித் திருக்கவும்
கனவு காணுங்கள்.

தரணியில் அனைவரும் தலைநிமிர்ந்திருக்கவும்
தலைக்கனமாயது மாறாதிருக்கவும்
கனவு காணுங்கள்.

தரையிலே நடப்பவர் விண்ணிலே பறக்கவும்
மண்ணுக்கும் விண்ணுக்கும் இடைவெளி குறைக்கவும்
கனவு காணுங்கள்.

இயற்கையும் செயற்கையும் இணைந்தே பயணிக்கவும்
ஒன்றோடு ஒன்று உதவியாய் இருக்கவும்
கனவு காணுங்கள்.

கனவுகள் அனைத்தும் நனவாகும் வரை
நனவானதெல்லாம் நிலைத்து நிற்கும் வரைக்
கனவு காணுங்கள்.

ஆனால்

கனவிலேயே வாழாதீர்கள்.

*கிராத்தூரான்*