என்னைக்காப்பது
எப்படியென்றா
பேசுகிறீர்கள்?
வேண்டாம்.....!!
அது எனக்கேதெரியும்!!
மலைகளைத்தகர்
க்கிறீர்களா?
நன்குசெய்யுங்கள்
பெருங்கடலடியின்
சிறுத்திட்டுக்கள்
சற்றே தங்களை
இடம்மாற்றினால்..
முளைத்திடும் புது
மலைகள் நிலத்தி
ன்
மேலே இமயம்போ
லே!
உமக்குக்கூலியோ
சுனாமியுடன்சுழல்
நிலநடுக்கங்கள்!!
எரிவாயு எடுக்க போகிறீர்களா??
எடுங்கள்எடுங்கள்
நிலம்தோண்டிஅடி
நீரையும் உறிஞ்சி
துப்பப்போகிறீர்க
ளா?
நன்குசெய்யுங்கள்
நிலம்வாழ்பல்லு
யிரும்,
நீங்கள்தோண்டிய
நிலப்பிளவில் வீழ்
ந்து
மட்கிபின்னொரு
நாளில் வைரமாய்
நல் தங்கமாய் மாறிக்கிடக்குமே
தேடுவார் யாரோ?
காடுகளைஅழிக்கி
றீர்களோ?
நன்கு அழியுங்கள்!!
ஒருபெருமழை
போதும்
நாட்டையும்அழித்
து நீங்கள்
நட்டுவைத்த வண்
ணக்
கொடிகளுடன் வி
ண்
தொட்டமாளிகைக
ளையும்
விழுங்கிச்செரித்
தே
அரண்மனைக்குள்
அரசமரங்களை
முளைப்பிக்கும்!!
அதன்பின்"வளர்ச்
சி"
ம"முன்னேற்றம்"
என்கிற வார்த்தை
எல்லாம்
காலாவதியாகி....
உங்களின்
புத்தகங்களும் ,
பதாகைகளும்
கடலுக்கடியில்.....
கழிவுகளாய் மட்டு
மே
கலங்கிக்கொண்
டு
தான் இருக்கும்....
முடிந்தால்உங்க
ளைக்
காப்பாற்றிக்கொ
ள்ளுங்கள்.
என்னைக்காப்பது
எப்படியென்று,
எனக்கேதெரியும்!!
இப்படிக்கு,
பூமி
வத்சலா