மாலை ....மிகவும்.. இனியது
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நீலத்திரை விரித்த வானம் ..
வெண்பட்டு மேகப்பஞ்சணை....
பகலெல்லாம்
உழைத்த களைப்பில்..
தலை சாய்த்து
செந்தளிர்க்கதிரவன் ....
செவ்வண்ண அலை குழைத்து ....
வண்ணக் கோலங்கள் வானம் இழைக்கும் ..
அடிவானம் அழகழகு காட்சிகளை ....
கணம்கணம் வரைந்து செல்லும் ...
மாலைத்தென்றல் குளிர்ச்சி கூட்டும்...
தெற்கிருந்து தன் கைகள் நீட்டும்....
எங்கிருந்தோ பறவைக்கூட்டம்....
இரைந்தபடி விரைந்து
செல்லும்.....
கூடு சேரும் அவசரமோ ...
நாடு தாண்டும் அவசியமோ ...
பணி முடித்து
வீடு செல்ல... ஆங்காங்கே மனிதர் கூட்டம் ..
உயர்ந்த பனை ..சில
மரங்களுடன். ...
நீண்டு கரிய தார்ச்சாலை ..
இருபுறமும்
ஓவியமாய்..பசிய வயல்
அந்தி நேரம் அழகு கூட்டும் ...
ஆதவனின் தலை மறைய...
காத்திருந்த இருள் கவியும் ...
வாசமிகு வெண் பூக்கள் எல்லாம் ...
புன்னகைக்க இதழ் விரிக்கும் ...
தூரத்தில் ஏற்றிவைத்த தீபம் ஒன்று .....
மின்விளக்கின் அழகு மிஞ்சும் .....
மெல்லிசையாய் கோயில்மணி .....
மிதந்து வந்து
இனிமை சேர்க்கும்....
கமழ்ந்து வரும் நறுமணங்கள் ..
கதம்ப வாசம்
மெய் சிலிர்க்கும் ...
ஓ !எத்தனை அழகு ...
இந்த மாலை....
இந்தப் பொன் அந்தி மாலை ...
இரவுடனே பகல் சேரும் ....
இந்தப் பொன் அந்தி மாலை ....
தெய்வானை,
மீஞ்சூர்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷