நில் என்று சொன்னாலும் நிற்காத
சில் என்ற மழை!
செல் என்று
சொன்னாலும்
செல்லாத காற்று!
சாய் என்று
சொல்லாமலேயே
சாய்ந்துவிட்ட
மரங்கள்!
காய் என்று
சொன்னாலும்
காயாத கதிரவன்!
நிமிர் என்று
சொன்னாலும்
நிமிராத
தென்னைகள்!
இன்னும்
இப்படியே எத்தனைநாள்களோ?
காவிரித்தாயின்
கழிமுகப்பகுதியில்
வாழ்வாதாரம் இழந்த நம்சொந்தங்களுக்கு!
த.ஹேமாவதி
கோளூர்
😭😭😭😭😭😭😭😭