*கீழடி உலக தொன்மையின் முகவரி, தமிழன் பதிவிட்ட வரலாற்று காலடி ,
*பேசா பொருட்களும் சரித்திரம் பேசும், ஏசும் மனிதரையும் வாழ்த்திட பேசும்......
கால வரிசையில் களப்பிரர் வீழ்த்திய ,
தீயிருள் கூட்டம் கலகம் செய்யும் ,
மாசிலா தமிழரின் கீழடி தொன்மையை, மறைத்து கொன்றிட போதனை செய்யும்.....
டாஸ்மார்க் தமிழனே கீழடியை திறந்து பார்.
சாதி படிந்த தமிழனே கீழடியை படித்துப்பார்,
மதம் பிடித்த தமிழனே கீழடியை வணங்கிபார்,
கீழடி நம் மூச்சு என்பது புரியும் .......
தமிழன் புதைத்துக் இடங்களிலெல்லாம் முளைப்பான்,
இப்போதெல்லாம் தமிழனின் சுவடுகளும்,
அதே இடத்தில் முளைக்க கற்றுக்கொண்டன,
முளைத்த சுவடுகள் கீழடிபோல் பேசவும் பழகிக் கொண்டன.....
பானையில் சின்னம் பதித்த தமிழன், உறைகிணறு கொண்டு நீர் காத்த தமிழன் ,
சீரும் காளை பழகி உழவு செய்த தமிழன்,
கற்காலம் முன்னே பொற்காலம் கண்டான் .....
கீழடியில் தமிழனை தேடும் முயற்சியில், நீங்கள் மூஞ்சிருவையும் லிங்கத்தையும் தேடிக்கொண்டு இருக்காதீர், சிலுவைகளையும் பிறைகளையும்அங்கு முளைக்கு செய்துவிடாதீர்,
கீழடி சமத்துவ தமிழனின்வெளிப்பாடு.....
கீழடியில் எத்தனை கட்ட ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்யுங்கள், தமிழனே முதல் மாந்தன் என்பதும், தமிழே முதல் மொழி என்பதும் வெளிப்படும்.
உலகின் மூத்தகுடி தமிழ் என்பதும் புலப்படும் .....
தமிழனே விழித்துக்கொள் இன்னும் கோடி ,
கீழடிகள் உன் காலடியில் உறங்குகிறது ,
விழித்தெழு.......
வாழ்க தமிழ்
*அறிவேந்தல்
முனைவர்
*கவிஞர் ராஜா ஆ
*ஒருங்கிணைப்பாளர்
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம்