மௌனத்தை இன்று
உன் தாய்மொழியாகக்
தத்தெடுத்னையோ!
பௌர்ணமி நிலவே?
திசைமாறிய காற்று
திருடிச் சென்ற
வெண்மேகங்களின்
வருகைதனை எதிர்நோக்கி
காத்திருக்கின்றனையோ?
இல்லையெனில்........
நட்சத்திர சன்னல்கள்
தாழ்திறக்க வேண்டி
ஏங்குகின்றனையோ?
காவலுக்கு உடன் வந்த
கண்கவர் மின்மினிகள்.....
கையொப்பமிட்டுவிட்டு
கால்நாழிகை நகரந்திட
சோகத்தில் நின்றனையோ?
உன்வரவுக்காகவே
காத்திருக்கும்........... நீ
சுமந்துவரும் கனவுக்காகவே
கண்களிங்கு ஏராளம்!!!!’
பாவம் ........ அவற்றை ஏமாற்றாதே!
மேகம் பிடிக்க நீயும்
வேகம் காட்டாதே! விடியல் வரை நகர்ந்து வா...
விந்தையான ஒரு
தருணத்தில் .......
உன்னை தேடியே வந்து
உறவாடிடும்
நீ தேடிய மேகங்கள்!
🌹🌹வத்சலா 🌹🌹
!