Header Ads Widget

Responsive Advertisement

இன்பம்



அன்பைக் கொடுப்பதில் ஆயிரம் இன்பம்,

அன்பைப் பெறுவதோ அதைவிட இன்பம்.


ஓரக் கண்ணால் பார்ப்பதும் இன்பம்,

பார்ப்பதை இரசிப்பதில் ஒருகோடி இன்பம்.


கண்ணும் கண்ணும் நோக்குதல் இன்பம்,

கண்ணுக்குள் அவனைக் காணுதல் இன்பம்.


கண்ணாளனாக மாறுதல் இன்பம்,

காதல் மொழிகளைக் கேட்பதும் இன்பம்.


புன்னகை முகத்தைப் பார்ப்பதும் இன்பம்,

புன்னகைக்க வைத்து மகிழ்வதும் இன்பம்.


கற்பனை உலகில் மிதப்பதும் இன்பம்,

கற்பனை அது என நெகிழ்தலும் இன்பம்.


என்னவள் அவளெனச் சொல்வதும் இன்பம்,

என்னவளே.. என அழைப்பதும் இன்பம்.


எனக்கே எனக்காய் என்னவள் ஆகுதல்.....

எனக்கே எனக்காய் என்னவள் ஆகுதல்,

இன்பமோ இன்பம் ஈடில்லா இன்பம்.


சுலீ. அனில் குமார்

கே எல் கே கும்முடிப்பூண்டி.