மனப் பெருவெளி
எங்கும் இறைந்து கிடந்தன ..
காலப் பெருவெளியின் தடங்கள் ...
தடங்களில் சில தழும்புகளாய்.. சில
அற்புத அனுபவப் பாடங்களாய் ....
தினம் தினமும் சரி செய்கிறேன் ... வாழ்க்கைப் பக்கங்களை ..
எப்போது முடியும்
கற்கும் பாடங்கள் ..?
ஏதோ ஒன்றில் பிழை.. எந்நாளும் .. என்னாலும்..
முற்றிலும் சரியாய்.. முடியாதா வாழ்க்கை ..
அனைத்தையும் கற்றுச் சிறக்காதா ..நாட்கள் ..
தெய்வானை,
மீஞ்சூர்.