விண்ணுயர்ந்த மாடங்களும்...
விரிந்து பரந்த சேனைகளும் ..
அள்ளிச் சேர்த்த செல்வங்களும் ...
குவிந்த வாழ்த்தும் கூட்டங்களும்..
எனக்கு நிகர் யார்?
என்ற அரசர்.. பேரரசர்களும் ..
பொன்னை மிஞ்சிய அழகுகளும் ...
மிஞ்சியிருப்பது மண்மேடு களாய் ..
மிஞ்சியிருப்பது
மண்மேடு களாய் ..
சொல்லும் பாடம் ஒன்றே
இவ்வுலகு தங்கிச்செல்லும் கூடு ...
எல்லாம் அறிவோம் நாமே ……வாழ்வின் எல்லையை அறிவோம் நாமே ……
பின்னதற்கு ஆற்றாமை.. பின் தள்ளுவோம் இயலாமை ....
அகத்தினைஅன்பினால் நிரப்பி ..
புன்னகை முகத்தில் ஏந்தி..
அதன்அலைகளை எங்கும் பரப்பி ..
எதிலும் இனிமை நிறைத்து ...வாழ்வோம் இனிய வாழ்க்கை ...
இந்த நாளும் உண்மை...
இந்த நிமிடமும் உண்மை...
எம் .தெய்வானை,
மீஞ்சூர்.