ஆடு மாடு
நாங்க மேய்ச்சோம்
அரை வயிறு
கஞ்சி குடிச்சோம்
ஆளான
குத்தத்துக்கு
அத்தை மக
வாக்கப்பட்டா
அனுசரிச்சு
அனுசரிச்சு
அஞ்சுபுள்ள
பெத்து போட்டா
காமராசு
புண்ணியத்துல
கால்நடைய
மேய்க்காம
கால்நடையா
அனுப்பி விட்டோம்
பள்ளிக் கூடம்
மத்தியான சோற
மதிச்சு
எப்படியோ
காலம் போச்சு
என்னென்னமோ
மாறிப்போச்சு
பட்டப் படிப்பு
படிச்சு நாலும்
பட்டணமும் போயாச்சு
உத்தியோகம்
கிடச்சு பொழப்பு
உசந்து தான்
போயாச்சு
வருசம் ஒரு
தடவை
பொங்கலுக்கு
வருவாக
பேரப்புள்ளைக
வார ஒரு முறை
வரப்படாதா இந்த
பாழா போன
பொங்க
வாட்சப்புல
பேசுறாக
வரி வரியா
எழுதுறாக
வாரியணைச்சு
விளையாட
வழி இருக்கா
சொல்லுங்க
என்னையும்
என்
கிழவியையும்
கடைசிப் புள்ள
பாத்துக்குவா
பக்கத்துல வச்சு
நல்ல வேளை
அவள மட்டும்
நான் பாத்துக்கல
படிக்க வச்சு...
_ வெள்ளத்துரை