ஈ
எறும்பு
அண்டாம
ஈரக் காத்து
படாம
வாயக்கட்டி
வயித்த கட்டி
என்ன வளர்த்த
என் ஆத்தா
என்
பொண்டாட்டி
தொல்லையில்லாம
எப்பொழுதும்
கதை பேசி
காலம் கழி
முதியோர் இல்லத்துல
மாசம் ஒரு தடவை
மறக்காம வந்திடுறேன்
உனக்கான கட்டணத்த
மறுக்காம் தந்திடுறேன்
நீ எனக்கு
சொல்லித் தந்த
பாடந்தானே
இது ஆத்தா
நான் பள்ளிக்கூடம்
போகையிலே
பாட்டி எங்கேனு
கேட்டபோது
அப்பனோட
அனுப்பி என்னை
பாத்து
வரச்சொன்ன இடம்
இதானே
அன்னைக்கே
பாத்து வச்சேன்
என் ஆத்தா
உனக்காக
இப்போ நான்
செய்யுறதும்
சரிதானே...
_ வெள்ளத்துரை