அவன்:
காலங்கள் போக நேரத்திலே கால்கள் நோக காத்திருந்தேன்
மாதங்களாகி போனாலும்
மனசை மாற்ற முடியலையே,,,,
அரசும் ஆலும் ஒன்றானால் அடியினில் அவனும் அமர்ந்திருப்பான்,,,
வணங்கிட நீயும் வரத்தானே பல நாள் நானும் காத்திருக்கேன்,,,
திரும்பிய திசையில் உன் முகமே
தெளிவாய் கண்டது என் மனமே
ஒரு நாள் திருடன் பல நாள் மாட்ட
நினைக்குது
நித்தம்
சுயம் வரமே,,,,
என்னில் பாதி நீயாக,,,
எண்ணில் பாதி நீயாகி,
தலை எழுத்திலும் பாதி நீயாகி,,,
உன்னில் நானும் வாழ்ந்திடத்தான் என் உலகை காத்து நிற்கின்றேன்,,,,
கண்ணில் வாழும் தேவதையே
உன் கருத்தை சொல்ல
மறுப்பது ஏன்?
இன்னும் கூட காத்திருக்க
உன்னை,
இடையில் கொஞ்சம் காட்டி விடு,,,
அவள் :
போதும் போதும் மாப்பிள்ளையே,, பொழுதும் போகுது வாய்ப்பில்லையே,,,
சீமான் மகளாய் இருந்தாலும், வீட்டில்,
பெண்ணைப் பெற்றவர் தேடிடுவார்,,,,
இருவரும் ஒன்றாய் வாழ்ந்திடத்தான்
எதுவும் நன்றாய் ஆகிடத்தான்
நிச்சயம் ஒன்று இருக்கத்தான்,,,
அது,
என்னை நீயும் மணக்கத்தான்,,,
காத்திருப்பு, எதிர் பார்திருப்பு,,,
அப்பு,
காத்திருப்பு,,,
எதிர்
பார்த்திருப்பு,,,
பாலா