அன்றைய பேனாக்களுக்கும்
முந்தையப் பேனாக்கள்
சொல்லிய காவியங்கள் சொல்லிமாளாது!
பனையோலைக்குப்
பொருத்தமாய் எழுத்தாணி
வடித்துத்தந்த காப்பியங்கள்
வாழ்வின் நெறியானதுஇன்று
வரைக்கும்!
மயிலிறகு பேனாக்கள்
மனங்கவர் புறம்,அகம் வழி
ஆனதெவர்க்கும்
அந்நியருடன் வந்திட்ட
அரிய தொடு மைப்பேனாக்க
தமிழையும் தத்தெடுத்து....
தரணிபுகழ் தந்தது என்றும்!
தவறின்றித்தமிழெழுதும்
பழக்கத்தை விதைத்தது!
மை அருவி பேரனாக்களோ
உண்மையை அருவியாக்கி
உலகுக்கே பாடம்புகட்டியது
தங்கத்தலைப்பாகையணிந்
த
கதாநாயகப் பேனாக்கள்!
திரைக்கதைக்கான வலிய
தெம்பைத்தந்தது!
கண்ணாடியுடல் பேனாக்கள்
காண்போரைக் கவர்ந்தது!
எத்தனை வகையில் அன்று
இருந்திருந்தாலும்
அத்தனையும் பேசியதோ சுத்தமான சத்தியமே!
நேர்மையில் குளித்து நிதானத்தை உடையாய்த்
தரித்து!
பாரபட்சம் என்பதே அறியாத
பரோபகாரியாய் அன்றைய
பேனாக்கள் வாழ்த்திடவளர்
-ந்தோர்பலரே!
வீழ்ந்தவர் எவரும் இலரே!
வாளால் சாதிக்கவியலாத வானுயர் சாம்ராஜ்ஜியங்கள்
பலவும் பேனாநுனியால்
வீழ்ந்த கதையின்றளவும்
வரலாற்றில்வலியபதிவுகளா
ய்
மௌனசாட்சிகளாய் உண்டு
இன்றைய பேனாக்கள் !
சுத்தமான சுயநலத்தை
மொத்தக்குத்தகைக்கு
எடுத்துக்கொண்டபதுமைக
வழுக்கிக்கொண்டே ஓடும்
மாய வித்தைகாரர்கள்!
கூர்மையற்றசுழலும்பந்துகள்
முன்நடத்திச் செல்வதாலே
விவேகமற்ற வேகத்தை
முன்னெடுத்துச்செல்லும்
மந்தை ஆடுகள்!
உண்மையற்ற வார்த்தை
ஜாலங்கள் செய்வதிலே
ஜகத்தையும் கூறுபோடும்
வாய்ச்சொல்வீர ர்கள்!
கண்கவரும் மேனிகொண்டு
கதையளப்பார் மெத்தவுண்டு
அரசிலார்க்குக் கைப்பாவை!
அராஜகத்துக்கு கைக்கூலி!
ஊடக வேசித்தனங்களின்
உறவாளி!
இதையுணர்ந்து நல்வழி
நடந்தால் நீயே அறிவாளி!
🌹🌹வத்சலா🌹🌹