Header Ads Widget

Responsive Advertisement

விடைத்தாள் திருத்தும் முகாம்



எத்தனை தொலைவில் வைத்திருக்கிறார்கள்?

எத்தனை நாள் தான் வைக்கப் போகிறார்கள்?

என்றுதான் முகாமை முடிக்கப் போகிறார்கள்?

கேள்வியோடு வேதனையாய் நிற்போர் ஒருபக்கம்.


தேர்வப் பணி நேரத்தில் அலையவிட்டார்கள் திருத்துதல் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்

தேர்வுக்கான படியே கிடைத்தபாடில்லை

இதற்காவது நேரத்தில் கொடுப்பார்களா இல்லையா 

மகிழ்ச்சி கலந்த வருத்தமுடன் நிற்போர் மறுபக்கம்.


முப்பது தாள் திருத்த மூன்று மணிநேர யாத்திரை

முடித்துவிட்ட பின்னாலே அதே திருப்பி யாத்திரை

மனமிருந்தால் கூட உடல் ஒத்துழைக்கவில்லை

விடுப்புக்காக வேண்டியே நிற்போர் ஒருபக்கம்.


நீண்ட நாள் இடைவெளியில் நட்பைப் பார்க்கிறேன்

நீண்டநேரம் அவருடன் பேசியும் மகிழ்கிறேன்

முகாமில் தானே முகமன் கூறி நிற்கிறேன்

கிடைத்தவாய்ப்பை மகிழ்வாக உபயோகம் செய்கிறேன்

கண்களில் மகிழ்ச்சியோடு நட்புகள் மறுபக்கம்


விடைத்தாள்கள் வந்ததும் துவங்கியது திருத்தம்

எழுதாதோர் தாள்களுடன் நடத்துகிறார் ஒரு யுத்தம்

கர கர கர என வருகிறது சத்தம்

கடமையோடும் கனிவோடும் துவங்கினார் அவர் திருத்தம்

தேறாத விடைத்தாளை பார்க்கையிலோ.... வருத்தம்.



*சுலீ. அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*