நட்பா? அன்பா? புரியவில்லை
காதலா? கவர்ச்சியா? தெரியவில்லை
புன்னகையோடவள் நின்றிருப்பாள்
புன்முறுவலோடு நான் கண்டு நிற்பேன்
பள்ளிப் பருவத்தின் அந்த நாட்கள்
பசுமையான நினைவுகளைக் கொண்ட நாட்கள்
அவள் எங்கோ நான் எங்கோ என்றிருந்தாலும்
நெஞ்சமதை இன்றும் மறக்கவே இல்லை.
அவள் பார்க்க ஆடைகள் உடுத்தி நின்றேன்
அவள் ரசிக்க மேடையில் பேசி நின்றேன்
பார்க்கின்றாளா எனப் பார்த்து நின்றேன்
பார்வையில் மட்டுமே பேசி நின்றேன்
பேசமட்டும் ஏனோ மறந்து நின்றேன்
என்றாலும் அந்தக் கல்லூரி நாட்களை
ஏனோ நெஞ்சம் மறக்கவில்லை.
காதலுக்காகவே கோவில் சென்றோம்
காதலுக்காகவே காத்து நின்றோம்
பெற்றோர்கள் வார்த்தையை மதித்து நின்றோம்
கடமையை நினைக்கையில் தவித்து நின்றோம்
காதலை அதற்காகத் துறந்து சென்றோம்
என்றாலும் நினைவுகள் அலைகளாக
அதையும் நெஞ்சம் மறக்கவில்லை
எதையும் நெஞ்சம் மறப்பதில்லை.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*