Header Ads Widget

Responsive Advertisement

விசம்



மது
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
விசத்தை விளம்பரத்தோடு
வியாபாரம் செய்யும்
விந்தை உலகம்.!
இது

வியாபாரமல்ல.!
மக்களை மயக்கத்தில்
இருக்க வைக்கும்
மதி நுட்பம்.

சிந்திக்க கூடாதென்ற
சீரிய ஏற்பாடு.
கேடான காரியத்தை
கேவலமில்லாமல்
செய்கின்ற கேவலம்.

உணவு இல்லா
ஏழைக்கு கூட
ஒரு குவாட்டர்  விசமே (மது.)
உணவாய் போனது.

ஆண்டி முதல்
அதிகாரிகள் வரை
போதை வந்தால்தான்
புத்தியே வேலை செய்கிறது.

குவாட்டர் இல்லாத
கூ.ட்டமே இல்லை.
அரசியல் வாதிகள்
இந்த அம்பைதான்
மக்கள் மீது ஏவுகிறார்கள்.

உலக மக்கள் தொகையில்
பாரதம்
இரண்டாம் இடமாம்..
முதலிடம் கூடாதென்று
ஆட் குறைப்பு செய்யும்
ஆழ்ந்த சிந்தனை.!
தூரநோக்கு பார்வை..!

இங்கு மவ்னமாய்
உயிர் உறிஞ்சப்படுகிறது.

இந்த. சமுதாய சீர் கேட்டை
யார் தட்டி கேட்பது.?
சீர்திருத்த சாட்டையை
யார் கையில் எடுப்பது..?

அப்துல் முத்தலிப். நெய்வேலி.
""""""  """"""" """'' """""""" """"""'