Header Ads Widget

Responsive Advertisement

தழும்புகள்



கறையில்லா நிலவுமில்லை!குறையில்லா மனிதருமில்லை!
தூயவானிலே விண்மீன்கள் போல
மச்சங்களும் மருக்களும் தேகத்திலே சிலருக்கோ அவற்றுடன் தழும்புகளும் உடன்சேரும்!
தழும்பென்றால்
அது வலிகளின் கல்லறை!
தழும்புகள் வந்த வழிகளோ பலவிதம்!
காயங்களால் உருவாகும்  தழும்புகள் யாவும் ஆறிய வலிகளாகும்! அவை ஒவ்வொன்றும் தடவிப் பார்க்கையில் மறந்தவலியை நினைவூட்டும்!நினைவூட்டினாலும் மனம் வலிப்பதில்லை!
சுடுசொல்லால்
மனங்களில் ஏற்பட்ட
தழும்புகள் யாவும்
காணா தழும்புகள்!
ஆனால் ஆறா தழும்புகள்!
கல்லறைச் செல்லும்வரை
வலியை உணர்த்திக் கொண்டேயிருக்கும் தழும்புகள்!
எப்போதும் மனதில் வலிக்கும் தழும்புகள்!
அறுவை சிகிச்சைத் தழும்புகளெல்லாம்
நோயை தோற்கச் செய்த வெற்றித்தழும்புகள்!
தாய்மார்களின் வயிறுகளில் பிள்ளையை வெளியே எடுத்த அறுவை சிகிச்சைத் தழும்புகள் யாவும்
தியாகத் தழும்புகள்!
வீரனின் முகத்திலும் மார்பிலும் விழுப்புண் தழும்புகள்!இறந்தே பிறந்திட்டாலும்
சதைப் பிண்டமாய்ப் பிறந்தாலும்
வாளால் முகத்திலும் மார்பிலும் கீறி
வீரத்தழும்புகளை உருவாக்கிய சங்கத்தமிழரின் தழும்புக்காவியம்
வேறெங்குண்டு?
தழும்புகள் ஒவ்வொன்றும்
நம்வாழ்வில் சில அடையாளங்களை விட்டுச் சென்ற வழித்தடங்களாகும்!

த.ஹேமாவதி
கோளூர்