கற்பிக்கப் பட்டாய்!
கற்றாய்!
படிப்பிக்கப் பட்டாய்!
படித்தாய்!
தேர்வுகள் எழுதுவிக்கப் பட்டாய்!
தேர்வெழுதினாய்!
ஆசிரியரின் அரவணைப்பும்
பெற்றோரின்
பாசப்பிணைப்பும்
கைகோத்திட
இதோ பொதுத்தேர்வு
எழுத புறப்பட்டு விட்டாய்!
தேர்வுக்கு நீ தயாரான கதையை உன்விழிகள் அறியும்!
அறிந்த விழிகள் முடிவில் நீ வெற்றி பெறுவதையும் கண்டு மகிழும்!
எழுச்சியுடன் எழுத வா!
*வெற்றி உனதே*
த.ஹேமாவதி
கோளூர்