Header Ads Widget

Responsive Advertisement

நிழல்


பெற்றோரின் நிழலில் தொடங்கும் வாழ்க்கை!

ஆசிரியரின் நிழலில் மலரும் புலமை!

நண்பர்களின் நிழலில் இனிக்கும் இளமை!

சொந்தங்களின் நிழலில் புரியும் இனிமை!

காதலின் நிழலில்

தொடரும் புதுமை!

குடும்பத்தின் நிழலில் அறியும் பாதுகாப்பு!

என எத்தனை எத்தனை நிழல்களில் தங்கி இளைப்பாறி மேலே வந்தோம்!

நாமும் பிறருக்கு நிழலாகி நின்று

இனிமைகள் தந்து

மகிழ்வோம்!

அப்போதுதான் நமக்கு இதுகாறும் நிழல்தந்தவர்கள் எத்துணை பாடுபட்டு நம்மின்பத்திற்காக  தம்மையே வருத்தி நிழல்தன்னைத் தந்தார்கள் என்பது புரியும்!


த.ஹேமாவதி

கோளூர்