நிறமற்றது எனும்
கோட்பாட்டைத் தகர்த்து
தனக்கான நிறத்தை
தேர்வு செய்வதில்
நீருக்கு இணையேதுமில்லை!
வான் நீலத்தை கடலிலும்
மண்பழுப்பை
மழைநீர்க்குட்டையிலும்
பச்சை நிறத்தை
பாசிபடர்ந்த குளத்திலும்
பெற்றுச்சிரிக்கிறது
மழலையாய்....!
தனக்கெனவாழா தகமையுடையார் போல்
வானவில்லின் மொத்த
நிறத்தையும் சுழற்றியடித்து
வெள்ளொளியாய் வாரிவழங்
கும்
வள்ளலாய் ஆதவன்!
அஃதே வானவில்லின்
ஏழு வண்ணங்களையும்
மொத்தமாய்க்குத்தகைக்கு
ஒன்றிணைத்து வனம் மலர
மனங்குளிர வைக்கும்
மழைமேகத்தின் நிறமோ
வளமைசேர்க்கும்கருமை!
வியக்க வைக்கும்
பிள்ளையோ ஊதா!
அதன் பெறுமைகூற
வார்த்தைகள் போதா
எண்ணங்களை உள்ளடக்கி
பிறரின் உணர்வுக்கு
மதிப்பளிக்கும் தோதா(க)!
நினைவுகளில் நச்சுக்கலப்பு
நிச்சயம் கூடாதென்பதால்
சிவன் கண்டத்திலேயே
சிறைவைத்த கருநீலம்!
பேதமின்றி யாவரையும்
பின்னிப்பிணைக்கும்
ஒரேஉணர்வு நான் “இந்தியன்” அதனை ஒட்டிப்பிணைக்கும் வண்ணம் நீலநிறம்!
விவசாயியின்வியர்வையை உணவாய் உரமாய்
உட்கொண்டு அவனின் உயரிய உழைப்பு நன்றி
கூற விரித்த பசியநிலங்கள்
விரித்த பாய்களாய்ப் பயிர்கள்பச்சைநிறம்!
மண்மணக்க !மாக்கோலம் மிகச்சிறக்க !எங்கும் மங்கலம் தங்க !பொன்னாய்,
பூவாய், பொன்தாலியாய் மின்னிடும் மஞ்சள்!
செங்குருதிச்சாக்காடாம்
போர்முனையில் ,உழைக்கும்
மக்களின் ஒருமித்த எண்ணமாய் ,பொதுவுடமை
கொள்கையாயென்றும், பிரதிபலிக்கும் சிவப்பும் சிறப்பே!
அமைதி ஆனந்தம் பொறுமை அனைத்தையும்
செம்மையாய் வெளியிட்டு
கம்பீரமாய் நிற்கும் செம்மஞ்சள் (ஆரஞ்சு)!!
இத்தனை நிறங்களை
மொத்தமாய்க் காண்கையில்
புருவமுயரும் வியப்பில்!
ஒற்றுமையே வாழுமென்றும்
சிறப்பில் !
🌹🌹வத்சலா🌹🌹