Header Ads Widget

Responsive Advertisement

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா,,,,



ஆண்டவனே என்னைப் பார்க்க ஆசைப்பட்டான்,,,

அவன்,
பாசக் கயிறையும் கையில் கொடுத்து அனுப்பி விட்டான்,,,

போதிய ஒலைகள் அவனிடமில்லை,,,
புரிந்து கொண்டு  திரும்பி விட்டான்,,,

சிவனுக்கு சொந்தம் நான் என்க,,,
சிரித்ததும் பாதி தெரிந்து கொண்டான்,,,

வந்தவன் வழியை மறந்து விட்டான்,,,
அவனையே அவனும் துறந்துவிட்டான்,,,

சென்றவன், அவனும் சொல்லிவிட்டான்,,,
சேவற்கொடியோன் தங்கள் மகன் சுப்பு என்றான்,,,,

கண்களும் அங்கு கலங்கிடவே
என் முகம் காண,பூமி
வந்தார்,,,

வந்தவர்,
சண்முகா என்றழைத்து, சரவணப் பொய்கையில் குளித்துவிட்டார்,,,

உன்னழகில் மயங்கி விட்டேன், என்னவன் எனத் தெரியாது,
பின்னவன் சொன்னதுமே
மண்ணுலகம் வந்து விட்டேன்,,,

என்ன தவம் செய்தேனோ
சின்னவனை நான் காண,
பேரழகு மாளிகையில்
நீ
பெரியவனை
வைத்திருக்கிறாய்,,,

பெண்ணவளும் எதிர்பார்த்து,
உன்னழகை கேட்டிடுவாள்,,,
தாயவளும் மனம் மகிழ நாலு வார்த்தை தந்திடுவாய்,,,

இளைய மகன் இங்கிருக்க,
என் வேலை முடிந்ததப்பா,,,
நான்
தேவலோகம்
செல்லுமுன்னே
நல் பாடம் சொல்லித் தந்திடுப்பா,,,,


- பாலா.