அன்பு இல்லம் (அநாதை இல்லம்)
நாங்கள் சில மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள்
இல்லை இல்லை தூக்கியெறியப் பட்டவர்கள்
நாங்கள் மதங்களால் மாறுபட்டிருந்தாலும்
மனங்களால் ஒன்றுபட்டிருக்கிறோம்
நாங்கள் நிறங்களால் வேறுபட்டிருந்தாலும்
கரங்களால் ஒன்று பட்டிருக்கிறோம்
நாங்கள் உணர்ச்சியால் வேறுபட்டிருந்தாலும்
உணர்வுகளால் ஒன்றுபட்டிருக்கிறோம்
நாங்கள் தனிமரமாய் இல்லாமல் தோப்பாய் வாழ்கிறோம்
எங்கெங்கோ பிறந்த எங்களை
பாராட்டி சீராட்டி படிக்க வைத்து
கட்டிக் காத்து வழி நடத்தும்
இந்த இல்லமே எங்கள் அன்பு இல்லம்
தி.பத்மாசினி