வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
வஞ்சனை இல்லா வண்ணம்
பார்ப்போருக்கு மகிழ்ச்சியூட்டும் வண்ணம்
கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம்
கண்டவுடன் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம்
காற்றில் மறையாத வண்ணம்
மழையில் கரையாத வண்ணம்
வெயிலில் வெளுக்காத வண்ணம்
வாழ்நாள் முழுதும் இருக்கும் வண்ணம்
வாழ்ந்தாலும் மறைந்தாலும்
வண்ணம் மாற பட்டாம் பூச்சியே
எங்களுக்கும் கற்றுத்தா அந்த ரகசியம்
நாங்களும் அடிக்கடி மாறாமலிருந்து
உம்மைப் போல் வாழ
தி.பத்மாசினி