வானவில்லைக் கத்தரித்துத் துளிதுளியாய் வானிலே பறக்கவிட்டது யாரோ?
தங்கநாணயங்களுக்கு
பட்டுச்சிறகுகள் முளைத்தனவோ?
அவை வானில் பறந்தனவோ?
நடமாடும் வண்ணப்பூக்களோ?
திரிசங்கு விண்மீன்களோ?
மலர்களின் தூதுவனோ?
தென்றலுக்கு மணஞ்சேர்க்கும் வாசனைத்திரவியக் குடங்களோ?
இறைவனின் சிரிப்போ?
வண்ணங்களின் அணிவகுப்போ?
அந்தரத்தில் தென்றல் எழுதுகின்ற புதுக்கவிதையோ?
மலர்களின் இரகசியசிநேகிதனோ?
மலர்களிடம் மட்டுமே பேசும் இவை நம் கண்களையும் பேசவைக்கும் வித்தை பெற்றவை!
பட்டாம்பூச்சி இவற்றை வெறுப்பவர் என்று இவ்வுலகில் சத்தியமாய் எவருமே இருந்திட வாய்ப்பே இல்லை!
த.ஹேமாவதி
கோளூர்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋